"பகவத் கீதை கூறுகிறது, ந தே விது꞉ ஸ்வார்த-கதிம்ʼ ஹி விஷ்ணும்ʼ (ஸ்ரீ.பா.7.5.31). அறிவு, அறிவின் இலக்கு என்ன? விஷ்ணுவிடம் சென்றடைவது, புரிந்துக் கொள்வது. தத் விஷ்ணும்ʼ பரமம்ʼ பதம்ʼ ஸதா பஷ்யந்தி ஸுரய꞉ (ருʼக் வேத). உண்மையில் புத்திசாலிகளாக இருப்பவர்கள், அவர்கள் வெறுமனே விஷ்ணுவின் திருவுருத்தை கவனிக்கிறார்கள். இதுதான் வேத மந்திரம். ஆகவே அந்த இலக்கை நீங்கள் அடைந்தாலே தவிர உங்கள் அறிவுக்கு மதிப்பில்லை. அது அறியாமை. நாஹம்ʼ ப்ரகாஷ꞉ ஸர்வஸ்ய யோகமாயா-ஸமாவ்ருʼத꞉ (ப.கீ. 7.25). நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளாதவரை, உங்கள் அறிவு இன்னமும் மறைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்."
|