TA/710218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இங்கு இந்த உலகில், ஆனந்த, ப்ராஹ்மணந்த, இவற்றின் பிரதிபலிப்பு உள்ளது, ஆனால் அது படபடவென்று அடிக்கிறது. தற்காலிகமானது. ஆகையினால் அது ஷாஸ்திரத்தில், கூறுகிறது, ரமந்தே யோகினோ (அ)னந்தே. யோகிகள்... யோகி என்றால் உன்னத நிலையை உணர்ந்தவர், அவர் யோகி என்று அழைக்கப்படுகிறார். அவர்கள மூன்று வகைகளாக பிரிக்கப்படலாம்: ஜ்ஞானீஸ், ஹட-யோகீஸ் அல்லது பக்த-யோகீ. அவர்கள் யோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே ரமந்தே யோகினோ அனந்தே. யோகிகளின் ஆனந்தத்தின் இலக்கு யாதெனில் வரம்பற்றதை தொடுவது."
710218 - சொற்பொழிவு - கோரக்பூர்