TA/710219 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்வாறு என்றால் தூரத்தில் புகை தென்படும் போது, அங்கே நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு உடனே புரிந்துவிடும். அது மிகவும் சுலபம். அதேபோல், அனைத்தும் நன்றாக செயல் புரிந்தால்—சூரியன் சரியாக நேரத்திற்கு உதயமாகிறது; சந்திரன் சரியாக நேரத்திற்கு வெளியே வருகிறது; அவை ஒளிருகின்றன; அவை தோன்றுகின்றன, மறைந்துவிடுகின்றன; அனைத்தும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன, பருவகால மாற்றங்கள்— எனவே காரியங்கள் சரியாக நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் எவ்வாறு "பகவான் இறந்துவிட்டார்" என்று கூற முடியும்? மேலாண்மை சரியாக நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, இது தானாக நடக்கிறது என்று நீங்கள் கூற முடியாது. இல்லை. உங்கள் அனுபவத்தில் சொந்தமாக நிர்வகிக்கப்படும் என்று எதுவும் இல்லை. இதற்குப் பின்னால் மூளைக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று நாம் பாராட்ட வேண்டும்."
710219 - சொற்பொழிவு CC Madhya 06.154-155 - கோரக்பூர்