"இந்த ஒலி... எவ்வாறு என்றால் கீர்த்னா நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு விலங்கு நின்றுக் கொண்டிருக்கிறது. அவனுக்கு அந்த கீர்தனாவின் பொருள் என்னவென்று புரியவில்லை, ஆனால் அந்த ஒலி அவனை தூய்மைப்படுத்தும். இந்த அறையில் பல பூச்சிகள், பல சிறிய உயிரினங்கள், எறும்புக்கள், கொசுக்கள், ஈக்கள் இருக்கின்றன. வெறுமனே இந்த புனித நாமத்தை, உன்னத அதிர்வை கேட்பதனால், அவர்கள் தூய்மைப்படுத்தப்படுவார்கள். பவித்ர-காதா. கிருஷ்ணர் கோபியர்களை கையாள்வதைப் பற்றி நீங்கள் விவாதிக்க ஆரம்பித்த உடனடியாக... ஏனென்றால் கிருஷ்ணரின் லீலைகள் என்றால் அங்கு மற்றோரு கட்சி நிச்சயமாக இருக்கும். மேலும் அந்த மற்றோரு கட்சி யார்? அதுதான் பக்தர்."
|