"ஒவ்வொரு ஜீவாத்மாக்களுக்கும் உணர்வுள்ளது. மூலமான உணர்வு இந்த பௌதிக உலகின் மாசுக்களல் அசுத்தப்படுத்தபடுகிறது. தண்ணீரைப் போல், அது மேகத்திலிருந்து நேரடியாக விழும் போது, அது தெளிவாக மேலும் அழுக்கான பொருள்கள் இல்லாமல் இருக்கிறது, ஆனால் அது நிலத்தை தொட்டவுடனே, அது சேறு நிறைந்ததாகிவிடுகிறது. மறுபடியும் சேறு நிறைந்த தண்ணீரை நீங்கள் தெளிய வைத்து வடிகட்டினால், அது மீண்டும் தெளிவாகிறது. அதேபோல், நம் உணர்வு, பௌதிக இயற்கையின் மூன்று வகை குணங்களால் மாசுப்படுத்தப்படுகிறது, நாம் ஒருவறுக்கொருவர் எதிரியாக அல்லது நண்பனாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் கிருஷ்ண உணர்வு என்னும் தளத்திற்கு வந்தவுடன், நீங்கள் உணர்விர்கள் அதாவது "நாம் ஒருவரே. கிருஷ்ணர் தான் அதன் மையம்."
|