TA/710318 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த ஜட உலகின் விஞ்ஞானிகள், அவர்களுக்கு ஆத்மாவைப் பற்றி எவ்விதமான தகவலும் தெரியாது. ஆகையினால் அவர்கள் சந்திர கிரகத்தில் உயிரினங்கள் இல்லை, சூரிய கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்று நினைக்கிறார்கள். வெறுமனே... இதுதான் கூப-மண்டூக-ந்யாய. டாக்டர் தவளை PhD., அவன் அவனுடைய சொந்த விதத்தில் யோசிக்கிறான். டாக்டர் தவளை நினைக்கிறார் அதாவது இந்த கிணற்றின் மூன்று அடி பரிமாணங்கள் தான் எல்லாவற்றிலும் உள்ளது, வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த போக்கிரி தத்துவவாதிகள் மேலும் போக்கிரி விஞ்ஞானிகள், இவர்களும் டாக்டர் தவளை நினைப்பதை போல் நினைக்கிறார்கள். அட்லாண்டிக் சமுத்திரம் இருக்க வாய்ப்பில்லை. அந்த மூன்று அடி பரிமாணங்கள், கிணற்று தண்ணீர் போதுமானது. ஆகையால் நாம் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் யூகம் செய்யக் கூடாது. யூகிப்பது உண்மையான

இலக்கை அடைய நமக்கு உதவாது."

710318 - சொற்பொழிவு SB 07.07.19-20 - மும்பாய்