"சூரியன் இருக்கும் எங்கும், சூரிய வெளிச்சம் உடனடியாக அங்கே இருக்கும். ஒரு துளி விஷத்தைப் போல். நீங்கள் சும்மா துளி விஷத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அது நாக்கில் பட்டதும், அது உடனடியாக உடல் முழுவதும் விரிவடைந்துவிடும், மேலும் இரத்தத்தை முழுவதும் , நீராக்கி, பிறகு மரணம். அது எவ்வாறு விரிவடைகிறது, ஒரு சிறு தானிய அளவு பொட்டாசியம் சயனைடு. வெறுமனே தானிய அளவு, உடனடியாக, ஒரு நொடியில். ஒரு பௌதிக பொருளுக்கு இவ்வளவு விளைவு உடனடியாக இருந்தால், ஆன்மீக அணுவால் அதைச் செய்ய முடியாதா? அது தான் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது."
|