TA/710319 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அங்கே நிறைய தேஹீஸ் இருக்கிறார்கள். தேஹீ என்றால் இந்த ஜட உடலை ஏற்றுக் கொள்பவர்கள், அவன் தேஹீ என்று அழைக்கப்படுகிறான். பகவத் கீதையிலும் அது கூறப்படுகிறது, கௌமாரம்ʼ யௌவனம் ஜர, ததா தேஹாந்தர-ப்ராப்தி꞉ தீரஸ் தத்ர ந முஹ்யதி (ப.கீ. 2.13). தேஹினாம் இஹ தேஹிஷு. எனவே தேஹிஷு என்றால் நான் இந்த உடல் அல்ல, ஆனால் நான் இந்த உடலை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எவ்வாறு என்றால் நாம் ஒரு விதமான ஆடையை ஏற்றுக் கொள்வது போல், அதேபோல், என்னுடைய ஆசைக்கு ஏற்றவாறு, என்னுடைய கர்மாவிற்கு ஏற்றவாறு, நான் ஒருவிதமான உடலை ஏற்றுக் கொண்டிருக்கிறேன், மேலும் அந்த உடலுக்கு ஏற்றபடி, நான் பலவிதமான வலிக்கும் மேலும் மகிழ்ச்சிக்கும் உட்பட்டிருக்கிறேன். இது நடந்துக் கொண்டிருக்கிறது."
710319 - சொற்பொழிவு SB 10.22.35 - மும்பாய்