"எனக்கு மரியாதை செலுத்துவது அவர்களின் கடமை, கிருஷ்ணருக்கு கொடுக்கும் மரியாதையின் அளவுக்கு, ஏன் அதற்கும் மேல். அது அவர்களின் கடமை. ஆனால் எனது கடமை, கிருஷ்ணர் என்று என்னை பிரகடனப்படுத்திக் கொள்ளாமலிருப்பது. பிறகு அது மாயாவாதம் ஆகிவிடும். பிறகு அவ்வளவுதான் எல்லாம் போய்விடும். ஆன்மீக குரு கடவுளின் சேவகர், கிருஷ்ணர்தான் கடவுள், பூரண தளத்தில் சேவகருக்கும் எஜமானருக்கும் வேறுபாடு இல்லை என்பதால். . . வித்தியாசம் உண்டு. சேவகன், தான் ஒரு சேவகன் என்பதை அறிவான், எஜமானர், தான் எஜமானர் என்பதை அறிவார். இருந்தாலும் அவர்களுக்கிடையில் வேறுபாடு எதுவுமில்லை. அது பூரணமானது."
|