"எனவே கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார், ஏனென்றால் அனைத்தும் அவர் மேல் சாய்ந்திருக்கிறது, அவருடைய சக்தியில். எவ்வாறு என்றால் ஒரு பெரிய தொழிற்சாலையில் அதன் உரிமையாளர் தொழிற்சாலையைவிட்டு வெளியேரி இருக்காலாம், ஆனால் தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறார்கள் அதாவது "இந்த தொழிற்சாலை இன்னாருக்கு சொந்தமானது." எப்பொழுதும் தொழிற்சாலையின் உரிமையாளரைப் பற்றிய உணர்வு தொழிலாளர்களுக்கு இருப்பது சாத்தியமானதால், அதேபோல், அனைவரும் எல்லா செயல்களிலும் கிருஷ்ண பக்தனாக வருவது சாத்தியமே. அந்த தத்துவத்தை தான் நாங்கள் உலகம் முழுவதும் போதிக்க முயற்சி செய்கின்றோம்."
|