"எனவே பாலியல் வாழ்க்கையில் ஒழுங்குமுறை இருக்கிறது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், தர்ம-அவிருத்த: பாலியல் வாழ்க்கை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. அதுதான் மனிதநேயம். இவ்வாறு அல்ல... பூனைகள் மேலும் நாய்களின் வாழ்க்கையில் கூட சில வரம்புகள் உள்ளன. அவர்களுக்கு பாலியல் வாழ்க்கைக்கு சில காலம் உள்ளது. அதேபோல், க்ருʼஹஸ்தர்களுக்கு பாலியல் வாழ்க்கைக்கு சில காலம் உள்ளது. மாதவிடாய்க்கு பிறகு, ஐந்து நாட்களுக்கு பிறகு, ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள உறவு கொள்ளலாம். மேலும் அந்த பெண் அல்லது மனைவி கர்ப்பிணியாக இருந்தால், அந்த குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகும் வரை பாலியல் உறவு இருக்கக் கூடாது. இவை தான் ஒழுங்குமுறை."
|