"பகவான் உங்களுக்கு வேண்டியதை, தேவைகளை வழங்குபவர் அல்ல. நீங்கள் போரை உருவாக்கிவிட்டு பிறகு தேவாலயத்திற்கு செல்கிறீர்கள். நீங்கள் ஏன் போரை உருவாக்கினீர்கள்? முன்னெச்சரிக்கை சிறந்தது... நீங்கள் கிருஷ்ண உணர்வில் இல்லாவிட்டால், பிறகு நீங்கள்—தேன த்யக்தேன புஞ்ஜீதா (இஸோ 1)— நீங்கள் மற்றவர்களுடைய சொத்தை ஆக்கிரமிப்பு செய்வீர்கள். பாப-பீஜ கொல்லப்பட வேண்டும். இப்போது போரை உருவாக்கிய பிறகு... என்ன பயன்? உங்கள் தவற்றால் போரை உருவாக்கிவிட்டு, நீங்கள் தேவாலயத்திற்கு சென்று பகவானிடம் வேண்டினால், "தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்," எனவே யாருக்காக நீங்கள் இந்த போரை உருவாக்கினீர்கள்? அவர்கள் தங்களுடைய போரை உருவாக்கினார்கள், மேலும் பகவானை தேவைகளை வழங்குபவராக செய்யகிறார்கள்: "இப்போது நான் போரை உருவாக்கிவிட்டேன். தயவுசெய்து அதை நிறுத்திவிடுங்கள்." ஏன்? நீங்கள் பகவானின் அனுமதியுடன் செய்தீர்களா? எனவே அவர்கள் துன்பப்பட வேண்டும்."
|