TA/710407 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்வாறு என்றால் அரசாங்கம் மதுபானக் கடை திறந்தது போல். அரசாங்கம் மது அருந்த ஊக்குவிக்கிறது என்று பொருள்படாது. அது அவ்வாறல்ல. யோசனை என்னவென்றால் அரசாங்கம் சில குடிகாரர்களை மது அருந்தவிடவில்லை என்றால், அவர்கள் அழிவை உருவாக்குவார்கள். அவர்கள் சட்டவிரோதமாக மது தயாரிப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த, அரசாங்கம் மது கடைகளை திறந்து அதிக விலையில் விற்கிறது. அதன் விலை... அதன் விலை ஒரு ரூபாய் என்றால், அரசாங்கத்தின் காவல் துறை அறுபது ரூபாய் கட்டணம் பெறுகிறது. எனவே அதன் யோசனை ஊக்குவிக்க அல்ல, ஆனால் கட்டுப்படுத்த. யோசனை என்னவென்றால் தடை செய்ய, குறைந்தபட்சம் நம் நாட்டில். அதேபோல், பாலியல் வாழ்க்கை அல்லது மாமிசம் உண்பது, அல்லது மதுபானம் அருந்த, ஷாஸ்த்ரத்தில் அனுமதி அளிப்பதால், அவை உங்களை தூண்டுவதற்கல்ல அதாவது "நீங்கள் இந்த தொழிலில் உங்களால் முடிந்தவரை தொடர்ந்து செல்லுங்கள்." இல்லை. உண்மையில் அது கட்டுப்பாட்டிற்கானது."
710407 - சொற்பொழிவு BG 07.16 - மும்பாய்