"எனவே மக்களுக்கு கிருஷ்ணரிடம் இருக்கும் கவனத்தை கிருஷ்ணர் இல்லாத நிலைக்கு திருப்பிவிட முயற்சி செய்பவர் யாரானாலும்... அதுதான் நவீன கால தத்துவஞானி மற்றும் கல்வியாளர் அல்லது மதவாதிகளின் வேலை. அவர்கள் பகவத் கீதையை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாதபடி வேறுவிதமாக விளக்குவார்கள். அதுதான் அவர்களுடைய வேலை. இத்தகையவர்கள் துஷ்க்ருʼதின என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தானும் கிருஷ்ணரிடம் சரணடைய தயாராக இல்லை, மேலும் அவர்கள் மற்றவர்களையும் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டாம் என்று தவறாக வழி நடத்துகிறார்கள். அதுதான் அவர்களுடைய வேலை. இத்தகையவர்கள் தான் துஷ்க்ருʼதின, தவறானவர்கள், முரடர்கள், போக்கிரிகள், மக்களை வேறு வழிக்கு திசை திருப்பிவிடுபவர்கள்."
|