"இந்த யுகத்தில், வெறுமனே ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, ஒருவர் மிக இலகுவாக ஆன்மீக வாழ்வில் முன்னேறிவிடலாம். மேலும் எப்படி இந்த மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் இளைஞர்களும் யுவதிகளும், அவர்களது கடந்த காலங்களில் பல சந்தேகங்களை கொண்டிருந்தாலும், இப்போது அவர்கள் தூய்மையாக உள்ளனர் என்பதை நீங்களே பார்க்கலாம். இது இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்ததனால் மட்டுமே நடந்தது. அவர்கள் தற்போது தைவீ சம்பத்தை வளர்த்து வருகிறார்கள். தைவீ சம்பத் என்றால் முக்தி மற்றும் ஆன்மீக தன்னுணர்வை நோக்கிய மிக இலகுவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் குணங்கள் ஆகும். இதுவே தைவீ சம்பத் எனப்படும்."
|