TA/710410 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே கிருஷ்ணரால் உயர்ந்த சக்தியை தாழ்வான சக்தியாக, மேலும் தாழ்வான சக்தியை உயர்ந்த சக்தியாக மாற்ற முடியும். அதுதான் அவருடைய சர்வ வல்லமை. அவ்வாறு இருக்க, கிருஷ்ணர் இந்த பௌதிக உலகில் தோன்றிய பொழுது, மாயாவாதீ தத்துவவாதிகளின் கூற்றுப்படி
அவர் ஜட உடலை பெற்றிருந்த போதும், அது பௌதிக உடல் அல்ல. அவரால் ஆன்மீகமாக மாற்றிக் கொள்ள முடியும். அதுதான் அவருடைய சர்வ வல்லமை. ஸம்பவாம்ய் ஆத்மா-மாயயா (ப.கீ. 4.6). மின் பொறியாளர் போல், அதே மின் சக்தியை, அவன் குளிர்சாதன பெட்டிக்கு பயன்படுத்தலாம், மேலும் அதை ஹீட்டருக்கும் பயன்படுத்துவான். அது அவனுடைய கையாளும் திறன். அதேபோல், கிருஷ்ணர், வெறுமனே உணர்வை மாற்றுவதால், அவருடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலம், இந்த பௌதிக உலகை ஆன்மீக உலகமாக மாற்ற முடியும். அது அவருடைய சக்தியில் உள்ளது." |
710410 - சொற்பொழிவு Pandal - மும்பாய் |