TA/710411 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்வாறு என்றால் நம் சாதாரண வாழ்க்கையில், நாம் சட்டத்தை, மாநில அரசாங்கம் அல்லது அரசனிடமிருந்து பெறுகிறோம். மாநில அரசாங்கம் அல்லது அரசனிடமிருந்து வரும் வார்த்தைகள் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது, மேலும் எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அதேபோல், பகவானால் அளிக்கப்பட்ட கட்டளை அல்லது கொள்கை மதம் என்று அழைக்கப்படுகிறது. பகவன் இல்லாத மதம் முட்டாள்தனமாகும். மதம்... ஏனென்றால் மதம் என்றால் பகவானின் குறியீடுகள். எனவே ஒருவர் பகவானின் இருப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இயற்கையாக அவனுக்கு மதம் இல்லை. மேலும் வேதத்தின் கொள்கைப்படி, மதமற்ற மனிதன் ஒரு மிருகம். தர்மேண ஹீன பஷுபி꞉ ஸமானா꞉."
710411 - சொற்பொழிவு Pandal - மும்பாய்