"எவ்வாறு என்றால் நீங்கள் இந்த ஆஸ்திரேலிய மாநிலத்தின் குடிமகன், ஆகவே நீங்கள் மாநிலத்தின் சட்டங்களை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். நீங்கள் அதை மாற்ற முடியாது. நீங்கள் இவ்வாறு கூறினால் அதாவது "எனக்கு இந்த சட்டங்கள் வேண்டாம்," நீங்கள் சட்டத்தைப் பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் அதை மாற்ற முடியாது, அல்லது உங்கள் வீட்டில் சட்டத்தை ஏற்படுத்த முடியாது. சட்டம் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. அதேபோல், மதம் என்றால் நீங்கள் மாற்ற முடியாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும், மேலும் அது பகவானால் இயற்றப்பட்டது. தர்மம்ʼ து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா. 6.3.19). அது வேத இலக்கியத்தில் கொடுக்கப்பட்ட வரையறை."
|