TA/710622 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதை ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது, மேலும் பகவத்கீதையில், 'பகவத் கீதையின் வழிமுறையானது என்னால் முதன்முதலில் சூரியதேவனுக்கு உபதேசிக்கப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது‌. அந்த காலப்பகுதியை மதிப்பிட்டுப் பார்த்தால், அது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஐரோப்பிய அறிஞர்களால் ஐயாயிரம் வருடங்கள் வரையான வரலாற்றையாவது ஒருசேர கண்டறிய முடிகிறதா? நான்கு கோடி வருடங்களை பற்றி பேச ஒன்றுமில்லை. வருணாசிரம முறையானது குறைந்தது ஐயாயிரம் வருடங்களாகவாவது நடைமுறையில் இருந்து வருகின்றமைக்கு நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்த வர்ணாசிரம முறையானது விஷ்ணு புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது: வர்ணாஷ்ரமாசரவத புருஷேண பர꞉ புமான் (CC Madhya 8.58). வர்ணாஷ்ரம ஆசரவத. இது விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர்ணாசிரம தர்மம் நவீன யுகத்தில் மதிப்பிடப்படும் எந்த வரலாற்று காலப்பகுதிக்கும் உட்பட்டது அன்று. அது இயற்கையானது."
710622 - உரையாடல் - மாஸ்கோ