"எனவே ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பான நிலையை புரிந்துக் கொள்வது அவனுடைய கடமையாகும், பகவானுடன் அவனுடைய உறவுமுறை மேலும், அந்த உறவை புரிந்துக் கொள்வது, அதற்கேற்ப நடந்துக் கொள்வது, பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். இந்த மானிட வாழ்க்கை அந்த காரணத்திற்காக ஆனதே. நம்மிடம் அந்த குறிக்கோள் காணவில்லை. நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வரை, சில நேரங்களில் நாம் சவால்விடுகிறோம் அதாவது "பகவான் என்று ஒருவர் இல்லை," "நானே பகவான்," அல்லது யாராவது சொல்வார், "பகவானைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை." ஆனால் உண்மையில் இந்த சவால் நம்மை காப்பாற்றாது. அங்கே பகவான் இருக்கிறார். நாம் ஒவ்வொரு கணமும் பகவானை பார்க்கலாம். ஆனால் நாம் பகவானை காண மறுத்தால், பிறகு பகவான் கொடூரமான மரணமாக நம் முன் காட்சியளிப்பார்."
|