"பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, ஸர்வஸ்ய சாஹம்ʼ ஹ்ருʼதி ஸந்நிவிஷ்ட꞉: 'நான் அனைவருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன்'. மத்த꞉ ஸ்ம்ருʼதிர் ஜ்ஞானம் அபோஹனம்ʼ ச: (ப.கீ. 15.15) அனைவருக்கும் யான் அறிவை அளிக்கிறேன், அத்துடன் அனைவரிடமிருந்தும் அறிவை யானே நீக்கிவிடுகிறேன்'. இந்த இரட்டை வேலை பரமாத்மாவால் செயல்படுத்தப்படுகிறது. ஒரு புறம் அவர் உதவி செய்கிறார், தன்னை எவ்வாறு உணர்வது, பகவானை எவ்வாறு உணர்வது என்று, மற்றும் மறுபுறம் பகவானை மறந்துவிடவும் உதவி செய்கிறார். முழு முதற் கடவுள், பரமாத்மாவாக எவ்வாறு இத்தகைய இரட்டை வேலை செய்கிறார்? இதன் உணர்வு என்னவென்றால், நாம் பகவானை மறக்க விரும்பினால், பகவான் அத்தகைய முறையில் உதவி செய்வார் அதாவது நாம் பகவானை ஒவ்வொரு பிறவியிலும் மறந்துவிடுவோம். ஆனால் பகவானுடன் நம் உறவை புதுபிக்க விரும்பினால் அவர் நம்முள்ளே இருந்து பல வழிகளிலும் உதவி செய்வார். இந்த மனித வாழ்க்கை பகவானை உணர்வதர்காக அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு."
|