"எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பகவானை எவ்வாறு காண்பது என்று மக்களுக்கு கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறது. நாம் பயிற்சி செய்தால் கிருஷ்ணரை காணலாம். எவ்வாறு என்றால் கிருஷ்ணர் கூறுவது போல், ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய (ப.கீ. 7.8). கிருஷ்ணர் கூறுகிறார், "நானே தண்ணீரின் சுவை." நாம் அனைவரும், தினமும் நீர் அருந்துகிறோம், ஒருமுறை மட்டுமல்ல, இரண்டுமுறை—மூன்று முறை அல்லது அதைவிட அதிகமாக. எனவே நாம் நீர் அருந்தியவுடன், நீரின் சுவை கிருஷ்ணர் என்று நினைத்தால், உடனடியாக நாம் கிருஷ்ண பக்தனாகிவிடுவோம். கிருஷ்ண பக்தனாவது மிகவும் கடினமான வேலையல்ல. வெறுமனே நாம் அதற்கு பயிற்சி செய்ய வேண்டும்."
|