"கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "நான்தான் இது மேலும் அது." என்று. அவர் கூறுகிறார், ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய (ப.கீ.7.8). நிதானமாக இருப்பவர்கள், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், அவர்களால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள இயலும். எவ்வாறு என்றால் ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய என்பது போல், "நானே நீரின் சுவை." நீங்கள் நீர் அருந்த வேண்டும். நான் சில நிமிடங்களுக்கு முன் நீர் அருந்தி என் தாகத்தை தணித்துக் கொண்டது போல. ஆனால் அந்த தணிக்கும் செயலின் கொள்கை கிருஷ்ணரே. எனவே நீர் அருந்தும் பொழுதெல்லாம் நாம் கிருஷ்ணரை உணரலாம். இதுதான் கிருஷ்ண உணர்வு. ஷாஸ் . . . ப்ரபாஸ்மி ஷஷி ஸூர்யயோ꞉. கிருஷ்ணர்தான் சூரிய ஒளி, கிருஷ்ணர்தான் சந்திர ஒளி. மலர்களின் நறுமணமும் கிருஷ்ணரே. நீங்கள் ஒரு மலரை எடுத்து நுகர்ந்தவுடன், அதன் நறுமணம் கிருஷ்ணரே."
|