"உங்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை ஏற்படும் பொழுது, பிறகு கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைகிறார். ஒருவருடைய சக்திக்கு ஏற்ப, முழு செயலும் சேவை தான். எனவே ஒருவர் சேவை செய்யும் பொழுது இவ்வாறு செய்ய வேண்டும் அல்லது அவ்வாறு செய்ய வேண்டும் என்பது தேவையில்லை. இல்லை. சக்திக்கு தகுந்தபடி சிறப்பாக செய்வது நோக்கமாக இருக்க வேண்டும். உதாரணத்திறகு எடுத்துக் கொள்ளுங்கள், நான் இங்கு சேவை செய்யும் நிலையில் வந்தேன், அதாவது நான் என் குரு மஹாராஜ் அவர்களுக்கு சில சேவைகள் அளிக்க வேண்டும், நான் வெற்றியைப் பற்றி நினைத்தேன் என்பதல்ல. என் நோக்கம் என்னவென்றால், குரு மஹாராஜ், என்னால் முடிந்த எதையாவது நான் செய்ய வேண்டும் என்று கூறினார். அது தோல்வியடையாலாம்; அது வெற்றிகரமாக இருக்கலாம்—நான் முயற்சி செய்கிறேன். இந்த சேவை மனப்பான்மை தான் நோக்கம்."
|