"கிருஷ்ணர் பசியால், அதாவது அவர் நம்மிடம் உணவு வேண்டி பிச்சை கேட்கிறார் என்பதல்ல. இல்லை. அவர் அன்பான பரிவர்த்தனை உருவாக்க முயற்சிக்கிறார், "நீ என்னிடம் அன்பு காட்டு; நான் உன்னிடம் அன்பு காட்டுகிறேன்." கிருஷ்ணர் பகவான். கிருஷ்ணர், நடைமுறையில் அவருடைய சக்தியால் அனைத்தும் உற்பத்தியாகிறது. ஜன்மாத்ய் அஸ்ய யத꞉ (ஸ்ரீ.பா.1.1.1). எனவே அவர் ஏன் பிச்சை கேட்க வேண்டும், என்னிடம், சிறிது இலை, சிறிது பழம் மேலும் சிறிது தணணீர் என்று? அவருக்கு வேலை இல்லை. ஆனால் அவருக்கு சிறிது இலை, சிறிது பழம் மேலும் சிறிது தணணீர் நாம் அன்புடன் அளித்தால்—"கிருஷ்ணா, நான் மிகவும் ஏழ்மையில் இருக்கிறேன் என்னால் எதுவும் வாங்க முடியவில்லை. நான் சிறிது பழம், சிறிது மலர், மேலும் சிறிது இலை கொண்டுவந்திருக்கிறேன். கனிவுடன் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்"—கிருஷ்ணா மிக்க மகிழ்ச்சி அடைவார். ஆம். மேலும் நீங்கள் கொடுத்ததை அவர் சாப்பிட்டால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் கிருஷ்ணருடன் நட்புக் கொள்ளுங்கள். அதுதான் எங்கள் பிரசங்கம்."
|