TA/710725 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பகவான் இருக்கிறார் என்பதை மறுக்கும் மக்கள், அவர்கள் கூறுகிறார்கள் அதாவது, "பகவானை உங்களால் எனக்கு காட்ட முடியுமா?" நீங்கள் பகவானைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள்? பகவான் கூறுகிறார் அதாவது, "நான் தான் சூரியஒளி. நான் தான் நிலவொளி." மேலும் யார் சூரியஒளியையும் மற்றும் நிலவொளியையும் பார்க்காதவர்கள்? எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். விடியற்காலை வந்தவுடனே, அங்கே சூரியஒளி இருக்கும். ஆக சூரியஒளி பகவான் என்றால், பிறகு நீங்கள் பகவானை பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள்? நீங்கள் மறுக்கக் கூடாது. கிருஷ்ணர் கூறுகிறார், ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய (ப.கீ. 7.8): "நானே நீரின் சுவை." எனவே நீரை சுவைக்காதவர்கள் யார்? நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம், தினமும், தண்ணீரை கேலன் கணக்கில். நமக்கு தாகம் எடுக்கிறது, மேலும் நம் தாகத்தைத் தணிக்கும் அந்த நல்ல சுவை, அது தான் கிருஷ்ணர்."
710725 - சொற்பொழிவு BS 32 - நியூயார்க்