"எனவே ஒருவரால் புலன்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால்... நியூயார்க்கில் சில யோகா பயிற்சி செய்யும் நிறுவனத்தில் நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் சில... இந்த ஆஸன, மேலும் அது முடிந்தவுடன், உடனடியாக புகைபிடிக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்களா? இந்த அளவு கட்டுப்பாட்டை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே இவை, இவை அனைத்தும் போலியானது. இது யோகா அமைப்பல்ல. யோகா முறை அவ்வளவு சுலபமானதல்ல, முக்கியமாக இந்த யுகத்தில். யோகா முறை என்றால் புலன்களை கட்டுப்படுத்துவது, மனதை கட்டுப்படுத்துவது; மற்றும் மனதை கட்டுப்படுத்துவது என்றால் நீங்கள் பல விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்—உங்களுடைய உண்ணுதல், தூங்குவது, நடந்து கொள்ளும் விதம். இவை பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு அஷ்டாங்க-யோக பயிற்சி செய்வதென்று."
|