"எனவே நீங்கள் எவருடைய எதிரியும் இல்லை; நீங்கள் அனைவருக்கும் நண்பன், ஏனென்றால் நாம் சரியான பாதையை காட்டுகிறோம். கிருஷ்ணரை, அல்லது பகவானை நேசிக்க முயற்சி செய்யுங்கள் . அவ்வளவுதான். உங்களுக்கு சொந்தமாக ஏதாகிலும் செயல்முறைகள் இருந்தால், அதை செய்யுங்கள். இல்லையென்றால், தயவுசெய்து எங்களிடம் வாருங்கள். அதை கற்றுக் கொள்ளுங்கள். ஒருவர் ஏன் வெறுப்படைய வேண்டும்? நீசாத் அப்ய் உத்தமாம்ʼ ஸ்த்ரீ-ரத்னம்ʼ துஷ்குலாத் அபி (நீதி-தர்பண 1.16). சாணக்ய பண்டிதர் கூறுகிறார் எந்த ஆதாரமாக இருந்தாலும் அதில் உள்ள சரியான விஷயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டு. அது முக்கியமல்ல. அவர் உதாரணம் கொடுக்கிறார்: விஷாத் அபி அம்ருʼதம்ʼ க்ராஹ்யம். அங்கே ஒரு ஜாடியில் விஷம் இருந்தால், ஆனால் அதன் மேல் கொஞ்சம் தேன் இருந்தால், நீங்கள் அதை பிடித்துக் கொள்ளுங்கள், அதை வெளியே எடுத்துவிடுங்கள். விஷத்தை எடுக்காதீர்கள், அனால் தேனை எடுத்துக் கொள்ளுங்கள்."
|