"எனவே இந்த இயக்கம், கிருஷ்ண பக்தி இயக்கம், என்றால் மக்களை நேரடியாக கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ளச் செய்வதற்கானதாகும். ஆகையினால் அவர்கள் உடனடியாக சந்தோஷமடைகிறார்கள். என் சீடர்களிடமிருந்து நான் ஆயிரம் கடிதங்களை பெற்றிருக்கிறேன். அவர்கள் "நாங்கள் எங்கள் வாழ்க்கையை பெற்றுவிட்டோம். நாங்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தோம்." அதாவது அவர்கள் கடமைப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். உண்மையில், அதுதான் அவர்கள் நிலை. கிருஷ்ணர் இல்லாமல், கிருஷ்ண பக்தி இல்லாமல், நாம் எல்லோரும் நம்பிக்கையற்ற, குழப்பமடைந்தவர்களாக இருப்போம். எனவே பல நல்ல சிறுவர்களும் பெண்களும் இங்கு கூடியிருப்பதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."
|