"நாங்கள் அங்கீகாரம் பெற்றவர்களிடமிருந்து கல்வி அறிவை பெற்றுக் கொள்கிறோம் மற்றும் தேவையற்ற ஊகம் செய்ய விரும்புவதில்லை. நாங்கள் அவ்விதமாக எங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டோம். எங்கள் நேரம மிகவும் மதிப்புமிக்கது. கோவிந்தர் எவ்வாறு அணுவிற்குள் நுழைந்தார் என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு பதிலாக, நாங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்ய, அந்த நேரத்தைப் பயன்படுத்துகிறோம். எனவே இந்த வழி மிகவும் அருமையானது. அனைத்து அறிவுத்திறனும் சரியானது, சீடர் பரம்பரையிலிருந்து வந்தது. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு மேலும் முன்னேற்றம் அடையுங்கள். அவ்வளவு தான். நாங்கள் தேவையில்லாமல் அதிகமாக வருந்தமாட்டோம்."
|