TA/710803 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் இந்த செயல்முறையில் ஈடுபட்டால், அவர் சுத்திகரிக்கப்படுகிறார். அதுதான் எங்கள் பிரச்சாரம். அவனுடைய கடந்த கால செயல்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கலியுகத்தில் அனைவருடைய கடந்த கால செயல்களும் மிகுந்த சந்தோஷமாக இல்லை. ஆகையினால் நாம் கடந்த கால செயல்களை கருத்தில் கொள்ளமாட்டோம். நாங்கள் வெறுமனே கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளும்படி உங்களிடம் கோரிக்கையிட்டோம். மேலும் கிருஷ்ணரும் அதை கூறுகிறார்,
ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ
அஹம்ʼ த்வாம்ʼ ஸர்வ-பாபேப்யோ...
(ப.கீ. 18.66)

அது இவ்வாறு இருக்கலாம், என் கடந்த பிறவியில் நான் பெரும் பாவியாக இருந்தேன், ஆனால் நான் கிருஷ்ணரிடம் சரணடைந்த பொழுது, அவர் எனக்கு புகழிடம் அளித்தார் மேலும் நான் சுதந்திர பெற்றேன். அதுதான் எங்கள் செயல்பாடு. நாங்கள் கடந்த கால செயல்களை கருத்தில் கொள்ளமாட்டோம். அனைவரும் கடந்தகால செயல்களால் பாவிகளாக இருக்கலாம். அது முக்கியமல்ல. ஆனால் அவன் கிருஷ்ணர் கூறியது போல் அவருடைய பாதுகாப்பை நாடினால், பிறகு கிருஷ்ணர் நமக்கு பாதுகாப்பு அளிப்பார். அதுதான் எங்கள் பிரச்சாரம்."

710803 - சொற்பொழிவு SB 06.01.15 - இலண்டன்