"கிருஷ்ணர் அர்ஜுனனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் அதாவது மய்ய் ஆஸக்த-மனா꞉, "நீ உன் மனதை என்னுடன், கிருஷ்ணருடன், இணைக்க பயிற்றுவிக்க வேண்டும்." உண்மையில், அதுதான் யோகா முறை. நம் மனம்... மனத்திற்கு இரண்டு வேலைகள் உள்ளது: சிலவற்றை ஏற்றுக் கொள்வதும் மற்றும் நிராகரிப்பதும். அவ்வளவுதான். எனவே நாம் மனதை வெறுமனே கிருஷ்ணருடன் இணைக்க பயிற்றுவிக்க வேண்டும். அதைத்தான் இவ்வாறு அழைக்கின்றோம் மய்ய் ஆஸக்த-மனா꞉. மயி, "என்னிடம்," ஆஸக்த, "இணைவது," மனா꞉ "மனம்." மய்ய் ஆஸக்த-மனா꞉ பார்த, "என் அன்பு அர்ஜுனா, நீ சும்மா என்னுடன் இணைந்தவர்களில் ஒருவனாக மாறு."
|