"எனவே இந்த ஆன்மீக ஆன்மா கருப்பொருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. முதல் அடுக்கு சூக்கும என்று அழைக்கப்படுகிறது, ஸூக்ஷ்ம—மன, புத்தி, அஹங்கார: மனம், அறிவு, மேலும் தற்பெருமை. இப்பொழுது தவறான தற்பெருமையுடன். உண்மையில் உங்களிடம் ஒரு அழகான ஆடை இருந்தால் நீங்கள் பெருமை கொள்வீர்கள், அதாவது "என்னிடம் இந்த அழகான, விலை உயர்ந்த ஆடை இருகிறது." ஆனால் நீங்கள் உண்மையில் அந்த ஆடையல்ல. அதுதன் அவனுடைய தவறான புரிதல். உங்களிடம் ஒரு அழகான வண்டி இருந்தால், ரோல்ஸ் ராய்ஸ், நீங்கள் அதில் அமர்ந்தால், நீங்கள் மிகவும் பெருமை அடைவீர்கள். எனவே இந்த தவறான அடையாளம் மாயா என்று அழைக்கப்படுகிறது. அனைவரும் அவர்களுடைய வேறுபட்ட உணர்வுகளின் அடுக்குகளுக்கு ஏற்ப சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது."
|