"கிருஷ்ணருக்கு நேரடி விரிவாக்கம் மேலும் விரிவாக்கத்தின் விரிவாக்கமும் உள்ளது. எவ்வாறு என்றால் கிருஷ்ணரின் உடனடி விரிவாக்கம் பலதேவ, பலராம ஆகியோர். பிறகு பலராமிலிருந்து அடுத்த விரிவாக்கம் சதுர்-வ்யூஹ, நால்வர்: ஸங்கர்ஷண, வாஸுதேவ, அநிருத்த, ப்ரத்யும்ன. மீண்டும், ஸங்கர்ஷணவிலிருந்து மற்றொரு விரிவாக்கம், நாராயண. நாராயணரிடமிருந்து, மற்றொரு விரிவாக்கம் உள்ளது. மீண்டும் ஸங்கர்ஷண, வாஸுதேவ, அநிருத்த இரண்டாவது நிலை உள்ளது... ஒரு நாராயணர் மட்டுமல்ல, ஆனால் எண்ணற்ற நாராயணர். ஏனென்றால் வைகுண்டலோகத்தில், ஆன்மீக வானில், எண்ணற்ற கிரகங்கள் உள்ளன. எத்தனை? இப்போது, கற்பனை செய்யுங்கள் இங்கு இந்த பிரபஞ்சத்தில் கிரகங்கள் உள்ளன. இது ஒரு பிரபஞ்சம். அங்கே மில்லியன் கணக்கில் கிரகங்கள் உள்ளன. உங்களால் எண்ண முடியாது. உங்களால் எண்ண முடியாது. அதேபோல், எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன. அதையும் உங்களால் எண்ண முடியாது. இருப்பினும், இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒன்றாக எடுத்து கொண்டால், கிருஷ்ணரின் விரிவாக்கத்தில் நான்கில் ஒரு பங்கு தான்."
|