"நீங்கள் பால் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள், மேலும் பசு தாயாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது உணர்ச்சி வசப்பட்ட கருத்தா? இது உணர்ச்சி வசப்பட்டதா? நீங்கள் ஒரு விலங்கின் பாலை அருந்துகிறீர்கள், மேலும் அதை ஒரு சாதாரண விலங்காக கருதுகிறீர்கள். நீங்கள் எத்தகைய நாகரீகமானவர்? வேத நாகரீகத்தின்படி, கிருஷ்ணர் கூட, அவர் பூத்தனாவின் பாலை குடித்ததால், அவள் அவருக்கு விஷத்தை கொடுக்க வந்த போதிலும், அவளை தாயாக ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணர் அவள் செய்த நன்மையை எடுத்துக் கொண்டார், அதாவது "அவள் என்ன செய்திருப்பினும், நான் அவள் மார்பிலிருந்து பால் குடித்தேன். ஓ, அவள் என் தாயாகிவிட்டாள். அவள் என் தாயை போல் அதே நிலையை பெற வேண்டும்." இது தான் உணர்ச்சி வசப்பட்ட கருத்து."
|