"எனவே நீங்கள் எத்தகைய வேலையிலும் ஈடுபடலாம். அது முக்கியமல்ல. அர்ஜுனரைப் போல். அர்ஜுன் ஒரு இராணுவ வீரன். எனவே அவன் தன் இராணுவ தொழிலால் கிருஷ்ணரை திருப்திப்படுத்தினான்; ஆகையினால் அவன் வெற்றியடைந்தான். எனவே அது ஒரு சோதனை. கர்மா அல்லது தர்மாவில் பலவிதமான பிரிவுகள் உள்ளன. கர்மாவும், தர்மாவும் ஒரே விஷயம் தான். தர்மா என்றால் நிர்ணயிக்கப்பட்ட கடமை, மேலும் கடமை என்றால் வேலை செய்வது. அதுதான் கர்மா. எனவே நீங்கள் கர்மாவின் வேறுபட்ட தரங்களில் எந்த நிலையிலும் இருக்கலாம், ஆனால் உங்கள் கர்மாவால் பரமபுருஷரை உங்களால் திருப்திப்படுத்த முடிந்தால், பிறகு நீங்கள் வெற்றியடைவீர்கள். இல்லையெனில் நீங்கள் பிணைக்கப்படுவீர்கள்."
|