"எதையும் பேசுவதற்கு முன்பாக சீடர், முதலில் ஆன்மீக குருவிற்கு மரியாதை வழங்க வேண்டும், இது தான் ஆசாரம். எனவே ஆன்மீக குருவிற்கு மரியாதை வழங்குவது என்றால், அவருடைய செயல்கள் சிலவற்றை நினைவில் கொள்வதாகும். செயல்கள் சிலவற்றை. எவ்வாறு என்றால் உங்கள் ஆன்மீக குருவிற்கு நீங்கள் மரியாதை வழங்குவது போல், நமஸ் தே ஸாரஸ்வதே தேவம் கௌர-வாணீ-ப்ரசாரிணே. இது உங்கள் ஆன்மீக குருவின் செயல்பாடு, அதாவது அவர் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் செய்திகளை பிரசங்கம் செய்கிறார் மேலும் அவர் ஸரஸ்வதீ டாகுரவின் சீடர் ஆவார். நமஸ் தே ஸாரஸ்வதே. நீங்கள் அதை ஸரஸ்வதே என்று உச்சரிக்க வேண்டும், ஸரஸ்வதி அல்ல. ஸரஸ்வதே தான்..., என் ஆன்மீக குரு. எனவே அவருடைய சீடர்கள் ஸரஸ்வதே. ஸாரஸ்வதே தேவம் கௌர-வாணீ-ப்ரசாரிணே. இவைதான் செயல்பாடுகள். உங்களுடைய ஆன்மீக குருவின் செயல்பாடுகள் என்ன? அவர் வெறுமனே பகவான் சைதன்ய மஹாபிரபுவின் செய்திகளை பிரசங்கம் செய்கிறார். அதுதான் அவருடைய வேலை."
|