TA/710815 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் வெவ்வேறு மாதிரியான உடலில், வேறுபட்ட நிலையில் போடப்படுகிறோம். எனவே முக்தி பெறுதல் என்றால், அதாவது ஒருவர் எத்தகைய கட்டுண்ட நிலையிலும் இருக்கக் கூடாது. கிருஷ்ணரை போல: அவர் எவ்வித கட்டுண்ட நிலையிலும் இல்லை. அதுதான் முக்தி. நாமும் அவ்வாறு இருக்கலாம், ஏனென்றால் நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்புக்களாவோம், நாமும் கட்டுண்ட நிலையற்று இருக்கலாம். எவ்வாறு என்றால், நாரத முனிவரைப் போல். நாரத முனிவர் விண்வெளியில் பயணம் செய்கிறார் ஏனென்றால் அவர் முக்தி பெற்ற ஆத்மா. அவர் கட்டுண்டவர் அல்ல. ஆனால் நாம் கட்டுண்ட நிலையில் இருப்பதால், நாம் விண்வெளியில், இயந்திரங்கள் அல்லது வேறு எந்த விதத்திலும் பயணம் செய்ய முடியாது."
710815 - சொற்பொழிவு SB 01.01.02 - இலண்டன்