TA/710819 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு மனிதனைப் போல், அவன் இரவு பகலாக அயராது உழைக்கின்றான். யாருக்காக? அவன் குடும்பத்தை, பிள்ளைகள் மேலும் மனைவியை பராமரிக்க. எனவே அங்கே கொஞ்சம் ரசா, கொஞ்சம் சுவை, இல்லையென்றால், அவனால் இரவு பகலாக அயராது உழைக்க முடியாது. குடும்பத்தைப் பராமரிக்க கடினமாக உழைப்பதில் கொஞ்சம் சுவை இருக்கிறது. மேலும் சில நேரங்களில் நாம் காணலாம், குடும்பம் இல்லாத ஒருவன், குடும்பப் பற்று இல்லாத ஒருவன், அவன் கடினமாக உழைக்கமாட்டான். அவன் வேலை செய்வதில் அக்கறை கொள்ளமாட்டான். இதுதான் நடைமுறை. ஆகையினால் வேத நாகரீகத்தில் குடும்ப வாழ்க்கை பரிந்துரைக்கப்படுகிறது, தவிரவும் ஒருவர் குழப்பம் அடைந்தால், நம்பிக்கையற்றவன் ஆனால், ஏனென்றால் அவனுக்கு குடும்ப வாழ்க்கையில் சுவையில்லை. எனவே அனைத்திலும் கொஞ்சம் ரசா இருக்கிறது, சுவை. அந்த சுவையின்றி, ஒருவராலும் வாழ முடியாது. இப்போது இங்கு இது பரிந்துரைக்கப்படுகிறது, ஷ்ரீமத்-பாகவதம்ʼ ரஸம் ஆலயம். இங்கு ஒரு சுவை இருக்கிறது, உங்கள் வாழ்க்கையின் இறுதிவரை நீங்கள் அனுபவிக்கலாம், அல்லது முக்தி அடையும் நிலைவரை."
710819 - சொற்பொழிவு SB 01.01.03 - இலண்டன்