"கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது மிகவும் கடினமான சர்ச்சைக் குறிய பொருளாகும். ஆனால் பகவான் சைதன்யாவின் கருணையால் நாம் கிருஷ்ணரைப் பற்றி சிறிதளவு புரிந்துக் கொள்ளலாம். பிறகு படிபடியாக... நிச்சயமாக, அதன் இறுதி குறிக்கோள் கிருஷ்ணரின் பொழுது போக்கில் நுழைவதெற்கே. ஆனால் யூகத்தினால் அல்லது பௌதிக ரீதியாக தவாறான கருத்தால் அல்ல, படிப்படியாக, ஸமைஹ்-ஸமைஹ். ப்ராதுர்பாவே பவேத் க்ரம꞉ (ப்ரஸ. 1.4.16). அங்கே காலவரிசை வழி, அல்லது படிப்படியான செயல்முறை இருக்கிறது. ஆதௌ ஷ்ரத்தா. முதலில், ஷ்ரத்தா, நம்பிக்கை: 'ஓ, கிருஷ்ண உணர்வு மிகவும் நல்லது'. இதுதான் நம்பிக்கை. ஆதௌ ஷ்ரத்தா தத꞉ ஸாது-ஸங்க꞉ (சி.சி. மத்ய 23.14-15). பிறகு, அந்த நம்பிக்கையை அதிகரிக்க, நாம் கிருஷ்ண உணர்வை மேலும் வளர்க்கும் நபர்களுடன் பழக வேண்டும். இதை தான் ஸாது-ஸங்க என்று அழைக்கின்றோம். (சி.சி.மத்ய 22.83). ஆதௌ ஷ்ரத்தா தத꞉ ஸா..,. அத பஜன-க்ரியா. பழகிய பின்பு, பக்தர்களுடன் இணைந்த பிறகு, இயற்கையாக ஒருவர், நான் சொல்ல நினைப்பதாவது, தீட்சை பெற ஆர்வம் கொள்வார்கள், எவ்வாறு பக்தி தொண்டு செயல்படுத்துவது என்று ஆர்வம் கொள்வார்கள். அதுதான் தீட்சை என்று அழைக்கப்படுகிறது. பஜன-க்ரியா."
|