TA/710822 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்வாறு என்றால், நீங்கள் சில குற்றச் செயல் புரிந்ததால், நீங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறீர்கள், மேலும் நீங்கள் கூறுகிறீர்கள். "என் தலைவரே, எனக்கு இந்த செயலைப் பற்றி தெரியாது; நான் இதை செய்துவிட்டேன். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இனிமேல் இதைச் செய்யமாட்டேன்." பிறகு நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள், அங்கே ஒரு... "அது சரி." ஆனால் நீங்கள் மன்னிக்கப்பட்ட பிறகு, மீண்டும் வந்து அதே குற்ற செயலை செய்தால், மீண்டும் சிறைபிடிக்கப்பட்டால், பிறகு நீங்கள் மிக மிக கடினமாக தண்டிக்கப்படுவீர்கள். இது பொது அறிவு. மக்கள் எவ்வாறு நினைக்கிறார்கள், அதாவது "நான் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வதால், அல்லது நான் பகவானின் புனிதமான நாமத்தை ஏற்றுக் கொண்டு அல்லது நான் தேவாலயம் செல்கிறேன், ஆகையினால் நான் அதிகமான குற்ற செயலை புரியலாம், கருத்தில் கொள்ளாதே: அது அடுத்த வாரம் அல்லது மறு நிமிடம் நான் உச்சாடனம் செய்யும் போது எதிர்க்கப்படும்"? இது ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வதில் மிகவும் பெரிய குற்றம். நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்."
710822 - சொற்பொழிவு Initiation - இலண்டன்