TA/710826 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் எந்த விதமான மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம், அது முக்கியமல்ல. நீங்கள் இந்து அல்லது முஸ்லீம் அல்லது கிறிஸ்துவராக இருக்கலாம், அது முக்கியமல்ல. அதன் தேர்வு என்னவென்றால் நீங்கள் காரணமற்ற..., பகவானிடத்து காரணமற்ற அன்பு உள்ளதா, மேலும் அந்த அன்பு விவகாரத்தில் எவ்விதமான பௌதிக காரணத்தால் தடைப்படாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறதா. அதுதான் மதத்தின் தேர்வு. ஸ்ரீமத் பாகவதம், இது எவ்வளவு அழகாக இருக்கிறது, இதன் வரையறை...
ஸ வை பும்ʼஸாம்ʼ பரோ தர்மோ
யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹைதுக்ய் அப்ரதிஹதா
யயாத்மா ஸுப்ரஸீததி
(ஸ்ரீ.பா. 1.2.6)

உங்களால் பகவானின் மீது இத்தகைய அன்பை உருவாக்க முடிந்தால், எந்த காரணமும் இல்லாமல், சோதிக்கப்படாமல், எவ்விதமான பௌதிக காரணத்தாலும் தடுக்கப்படாமல், பிறகு நீங்கள் ஸுப்ரஸீததி, உணர்வீர்கள், முழுமையான திருப்தி—இனி கவலை இல்லை, அதிருப்தி இனி இல்லை. உலகம் முழுதும் ஆனந்தம் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்."

710826 - சொற்பொழிவு SB 01.02.06 - இலண்டன்