TA/710827 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சுவர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு, அது முக்கியமல்ல. அதுதான் தூய்மையான பக்தி. அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (ப்ரஸ. 1.1.11), எவ்வித ஆசையும் இல்லாமல். அதுவும் ஆசைதான் அதாவது, "நான் பரமபதம் அடைகிறேன் இறைவனை சென்று அடைகிறேன்." ஆனால் அந்த ஆசை மிகவும் உயர்ந்த தகுதி பெற்ற ஆசை. ஆனால் ஒரு தூய்மையான பக்தனுக்கு அந்த ஆசை கூட இல்லை. அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (சி.சி. மத்ய 19.167).

அவர்கள் ஆசைப்படுவதில்லை... எதற்கு... அவர்கள் பரமபதம் அடைய கூட ஆசைப்படுவதில்லை, மேலும் உயர்வை அடைய ஆசைப்படுவதோ அல்லது பரலோக கிரகத்திற்கு செல்வதற்கோ எவ்வாறு ஊக்குவிப்பது. அவர்கள் வெறுமனே விரும்புவது, "கிருஷ்ணர் விரும்பும் இடத்தில் இருக்க எனக்கு அனுமதியளியுங்கள். நான் அவருக்கு சேவை செய்வதில் ஈடுபடுவேன்." அதுதான் தூய்மையான பக்தி. அவ்வளவுதான்."

710827 - சொற்பொழிவு SB 01.02.06 - இலண்டன்