TA/710829 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரபுபாதர்: செயற்கையாக கிருஷ்ணரை பார்க்க முயற்சி செய்யாதீர்கள். பிரிவின் உணர்வில் முன்னேற்றம் அடையுங்கள், பிறகு அது பூரணம் அடையும். அதுதான் பகவான் சைதன்யா கற்பித்தது. ஏனென்றால் நம் ஜட கண்களால் கிருஷ்ணரை நாம் காண முடியாது. அத꞉ ஷ்ரீ-க்ருʼஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை꞉ (சி.சி. மத்ய 17.136). நம் ஜட புலன்களால் நாம் கிருஷ்ணரை காண முடியாது, கிருஷ்ணர் பெயர்களைப் பற்றி கேட்க இயலாது. ஆனால் ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ, நீங்கள் பகவானின் சேவையில் ஈடுபடும் பொழுது... சேவை எங்கிருந்து தொடங்குகிறது? ஜிஹ்வாதௌ. சேவை நாவிலிருந்து தொடங்குகிறது, கால்களிலிருந்து, கண்கள் அல்லது காதுகளிலிருந்து அல்ல. அது நாவிலிருந்து தொடங்குகிறது. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. நீங்கள் நாவிலிருந்து சேவையை தொடங்கினால்... எவ்வாறு? ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். உங்கள் நாவை பயன்படுத்துங்கள். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே. மேலும் கிருஷ்ண பிரசாதம் சாப்பிடுங்கள். நாவிற்கு இரண்டு வேலைகள் உள்ளன: ஒலியை வெளிப்படுத்துவது, ஹரே கிருஷ்ணா, மேலும் பிரசாதம் உட்கொள்வது. இந்த செயலால் நீங்கள் கிருஷ்ணரை உணர்வீர்கள். பக்தர்: ஹரிபோல்!
710829 - சொற்பொழிவு Festival Appearance Day, Srimati Radharani, Radhastami - இலண்டன்