"எவ்வாறு என்றால் ஒரு குடிமகன் சுதிந்திரமாக இருக்க வேண்டியவன், ஆனால் சில நேரங்களில் அவன் சிறையில் அடைக்கப்படுகிறான், ஏனென்றால் அவன் வேறுபட்ட குற்ற சக்தியின் கீழ் வேலை செய்தான். ஆகையினால் அவன் சிறையில் அடைக்கப்படுகிறான். ஆனால் அவன் முற்றிலும் சமுதாயத்துக்குரியவனாக மாறினால், பிறகு அவனுக்கு சிறைவாசமில்லை—அவன் சுதந்திரமாக நடமாடலாம். எனவே நாம் பௌதிக சக்தியின் கீழ் செயல்பட விருப்பம் கொண்டுள்ளோம்—ஆகையினால் நாம் துன்பம் அடைகின்றோம், அங்கே பிரச்சனைகள் இருக்கின்றன். மேலும் நாம் ஆன்மீக சக்தியின் கீழ் செயல்பட விருப்பம் கொண்டால், பிறகு நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுதான் வேறுபாடு."
|