TA/710913 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொம்பாசா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் பகவானின் உடலில் ஒரு சிறு துண்டுகளாவோம். பகவான் ஒரு தங்க கட்டியாக கருதப்படுகிறார், மேலும் நாம் அந்த தங்கத்தின் சிறு துகள்கள். எனவே நாம் சிறு துகள்களாக இருந்தாலும், தரத்தில் நாம் தங்கமாவோம். பகவான் தங்கமாவர்; நாமும் தங்கமாவோம். ஆகவே உங்கள் நிலையை உங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தால், பிறகு உங்களால் பகவானையும் புரிந்துக் கொள்ள இயலும். எவ்வாறு என்றால் அரிசி இருக்கும் ஒரு பையிலிருந்து நீங்கள் சிறிதளவு தானியத்தை எடுத்து பாருங்கள், பிறகு அந்த பையிலிருக்கும் அரிசியின் தரம் என்ன என்பதை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் மேலும் அதன் விலையை மதிப்பீடு செய்யலாம். எனவே நீங்கள் உங்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்தால், அதன்பின்பு பகவான் யார் என்று உங்களால் புரிந்துக் கொள்ள இயலும். அல்லது வேறு வழியில்: நீங்கள் பகவானை புரிந்துக் கொண்டால், பிறகு நீங்கள் அனைத்தையும் புரிந்துக் கொள்வீர்கள். ஒரு வழி ஏறும் செயல்முறை, ஒரு வழி இறங்கும் செயல்முறை."
710913 - சொற்பொழிவு BG 02.13 - மொம்பாசா