"எனவே நீங்கள் மிகவும் எளிதாக கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராகிவிடுவீர்கள். கிருஷ்ணரின் சேவகனாக, அல்லது பக்தனாக, மாறுவதென்றால், கிருஷ்ணர் அர்ஜுனரிடம் கூறியது போல், பக்தோ (அ)ஸி ப்ரியோ (அ)ஸி மே (ப.கீ. 4.3): "நீ என்னுடைய பக்தன், மேலும் நீ எனக்கு மிகவும் பிரியமானவன்." எனவே அதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும், நாம் எவ்வாறு கிருஷ்ண பக்தனாவது மேலும் எவ்வாறு கிருஷ்ணருக்கு பிரியமானவனாவது. பிறகு கிருஷ்ணருக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் எளிதாகிவிடும், மேலும் அந்த இயக்கத்தை விரிவுபடுத்தினால், நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். எனவே இங்கு கூடியிருக்கும் அனைத்து நன்மகன்களையும், பெண்களையும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பற்றி புரிந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்."
|