"பரம்ʼ த்ருʼஷ்ட்வா நிவர்ததே (ப.கீ. 2.59), பகவத் கீதையில், "ஒரு மனிதன் ஒரு நல்ல காரியத்திற்கு அடிமையான பிறகு, அவன் கெட்ட பழக்கங்களை கைவிட்டுவிடுவான்." எவ்வாறு என்றால் ஒரு குழந்தையைப் போல், ஒரு சிறுவன், அவன் சில நேரங்களில் மிகவும் சுட்டித்தனமாக விளையாடுவான், ஆனால் அவன் வளர்ந்த பிறகு, அல்லது அவன் படிப்பில் பழக்கப்படுத்தப்பட்ட பிறகு அவன் சுட்டித்தனமாக நடந்துக் கொள்வதில்லை—அவன் வாசிக்கிறான் மேலும் எழுதுகிறான், அவன் பள்ளிக்குச் செல்கிறான் மேலும் நிதானமான மற்றும் மென்மையானவனாகிறான். இதை தான் பரம்ʼ த்ருʼஷ்ட்வா நிவர்ததே என்று அழைக்கின்றோம். அது இயற்கையாக இருந்தாலே தவிர, நீங்கள் கட்டாயப்படுத்தி எதையும் கற்பிக்க இயலாது. எனவே கிருஷ்ண பக்தி அனைவருக்கும் இயற்கையானது—அனைவருக்கும்."
|