"இந்த வெளிநாட்டில், நைரோபியில் இருக்கும் அனைத்து இந்தியர்களிடமும், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் தீவிரமாக பங்கு கொள்ள வேண்டி நான் கோரிக்கையிடுகிறேன். இது இந்த முழு உலகத்திற்கும் இந்தியாவின் பரிசு. இந்தியா உண்மையில் புகழ்பெற்ற நாடாக வருவதில் தீவிரமாக இருந்தால், மேற்கத்திய உலகின் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதால் அவர்கள் புகழ் பெற்ற நாடாக முடியாது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அவர்கள் நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தனர். கிருஷ்ண உணர்வு என்னும் இந்த தொழில்நுட்பத்தை கற்று கொண்டு மேலும் அதை உலகம் முழுவதும் விநியோகம் செய்யுங்கள். அவர்களுக்கு அது தேவைப்படுகிறது."
|