"நீங்கள் ஆசையற்றவராகும் பொழுது, அதுதான் உங்கள் விடுதலை. ஆசையற்று என்றால் பௌதிக உலகை ஆளும் ஆசையின்றி இருப்பது. இப்பொழுது நாம் பௌதிக உலகை எவ்வாறு ஆளுவது என்ற ஆசை கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் பெரிய தொழிலதிபராக முயற்சி செய்கிறார், யாரோ ஒருவர் மந்திரியாக முயற்சி செய்கிறார், யாரோ இதுவாக மேலும் அதுவாக முயற்சி செய்கிறார். அவர்கள் எப்பொழுதும் ஆசையால் நடத்தப்படுகிறார்கள். அந்த ஆசைகள் தூய்மை அடையும் போது, அதாவது "நான் வெறுமனே பகவானுக்கு, அல்லது கிருஷ்ணருக்கு சேவை செய்வேன்," பிறகு நீங்கள் தூய்மையடைவீர்கள். இல்லையெனில் நீங்கள் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அந்த குறிப்பிட்ட வகையான உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும்."
|